2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவிலுள்ள கிராமப்புற வீதிகளை புனரமைக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸீன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமப்புறங்களில் உள்ள வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளருமான எஸ்.கனகரத்னம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளமையை பாராட்டும் மக்கள், கிராமப் புறங்களில் காணப்படும் உள்வீதிகளையும் புனரமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  தண்ணீரூற்று, குமுழமுனை ஊடாக அளம்பில் செல்லும் சுமார் 20 கிலோமீற்றர் ரையிலான வீதி, துணுக்காய், கந்தபுரம் வரையிலான வீதி, வன்னிவிலான் நட்டான்கண்டல் வரையிலான வீதி, துணுக்காய் முதல் நட்டான்கண்டல் ஊடாக வவுனியா செல்லும் வீதி உள்ளிட்ட இன்னும் சில வீதிகளும் புனரமைக்கப்படவில்லை.

எனவே, இதனை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .