2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி உரிமையாளர்களை நான் தாக்கவில்லை: சின்னராஜா விஜயராஜன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் எவரையும் தான் தாக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை வியாழக்கிழமை (13) தாக்கியதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பில் விஜயராஜனிடம் விளக்கம் கேட்டபோது,

'வைத்தியசாலைக்கு முன்பாக நின்றவர்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் எமது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். அதிலிருந்து சிலர் துண்டுப்பிரசுரத்தை வாங்காது எமது ஆதரவாளர்களுடன் முரண்பட்டனர். முரண்பாடு கைகலப்பாக மாறும் நிலையில் இருந்த போது, நான் அங்கு பொலிஸாருடன் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். துண்டுப்பிரசுரம் வாங்க மறுக்கலாம், ஆனால் நாங்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதை தடுக்க முடியாது. அங்கு சென்ற பொலிஸாரும் அவர்களுக்கு அதனை எடுத்துக்கூறினர்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .