2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முறிகண்டி கிராமத்துக்கான வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பழைமை வாய்ந்ததும் அதிகளவான விவசாயக் குடும்பங்களைக் கொண்டதுமான பழைய முறிகண்டி கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையால் அங்குள்ள மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றான பழைய முறிகண்டி கிராமத்தில் 250இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் மேற்படி கிராமத்தின் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.

சாதாரண தேவையை நிறைவேற்றுவதற்கும் அக்கிராம மக்கள் வேறு இடங்களையே நாடவேண்டி உள்ளது.

இக்கிராமத்துக்கான பிரதான வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், இவ்வீதியை பயன்படுத்துகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட இப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .