2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'வன்னி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தருணம்'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபட்டு எங்களை நாடாளுமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ள வன்னி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருணம் இது' என இம்முறை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

'தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு தொடர்ச்சியாக வாக்களித்து பலரை நாடாளுமன்றம்  அனுப்பிய வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்கள், மீண்டும் எம்மை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருணமாக இதை ஏற்கின்றோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'கடந்த காலங்களில் எமது மக்கள் அனுபவித்த அனைத்து துயரங்களுக்கும் விடைகொடுக்க முற்படுவோம். மஹிந்த அரசாங்கம் மைத்திரி அரசாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்  உடனடியாக வழியுறுத்தவுள்ளோம். காணி அபகரிப்பு, வீட்டுத்திட்டங்களில் உள்ள முறைகேடுகள், வேளைவாய்ப்புக்களில் தகுதியுள்ள எமது இளைஞர் யுவதிகள் நிராகரிக்கப்படுகின்ற  சந்தர்ப்பங்கள் போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்று, எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை மாற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு குரல் கொடுக்கும். குறிப்பாக காணாமல் போனவர்களின் நிலை குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதிக அக்கரை செலுத்தும்' என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .