Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் போரிட்டு மாண்ட வன்னி பிராந்தியத்தின் இறுதித் தமிழ் மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 207ஆவது சிரார்த்ததினம் இன்று ஞாயிற்றுக்கிழமை வுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
மாவட்ட செயலக வளவிலுள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு நகரசபைத் தலைவர் ஜி.நாதன் தலைமையில் காலை 9மணிக்கு நடைபெற்றது. நகரசபையின் உபதலைவர் எம.;முகுந்தரதன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.முனாபர், செயலளார் எம்.வசந்தகுமார் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து; 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டிய 13 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் வைபவம் நகரசபை கலாசார மண்டபத்தில நடைபெற்றது. இந்த வைபவத்தில் உரையாற்றிய நகரசபைத் தலைவர,; வவுனியாவில் ஏழைக் குடும்பத்தில் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும.; அதனூடாக வறுமை ஒழிந்து விடும். கல்வி அபிவிருத்தி செயல்பாட்டிற்கு அனைத்து தரப்பினரும் உதவவேண்டும் என கேட்டுக்கொண்டார். சமூக எழுச்சியும் சமூக கட்டுப்பாடும் வரவேண்டுமானால் கல்வி வளம்பெறவேண்டும் என்றும் தெரிவித்தார்
இந்த சிலை 1982ஆம் ஆண்டு ஜுலை மாதம் 16ஆம் திகதி வவுனியா வளாகத்தில் நிறுவப்பட்டது. அதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய முன்னாள் வவுனியா தொகுதி எம்.பி அமரர் ரி-சிவசிதம்பரத்தின் முயற்சி இங்கு நினைவுகூரத்தக்கது.
34 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago