2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மன்னாரில் வெள்ளத்தால் 3,919 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எஸ்.ஜெனி)


மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் 1,297 குடும்பங்களைச் சேர்ந்த 3,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருவதுடன், மல்வத்துஓயாவும் பெருக்கெடுத்துள்ளதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மடு உதவி அரசாங்க அதிர் பிரிவில் 255 குடும்பங்களைச் சேர்ந்த 872 பேரும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,814 பேரும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 611 குடும்பங்களைச் சேர்ந்த 1,233 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் 10 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தம்பனைக்குளம், கட்டையடம்பன் ஆகிய கிராமங்களும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மடுக்கரை, இராசமடு, இசைமாளத்தாழ்வு, அச்சங்குளம் ஆகிய கிராமங்களும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மருதமடு ஆகிய கிராமமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

இதேவேளை, முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்துக் கிராமங்களுக்குமான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில் இக்கிராமங்களிலுள்ள மக்கள் வெளியேற முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கிடையில், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை நானாட்டான் பிரதேச செயலாளர் சி.ஏ.சந்திரய்யா மேற்கொண்டுவருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .