2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

’703 உயர்தர மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமை பரிசில்’

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் உயர்தரத்தில் கல்வி கற்கும் 703 மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர கல்வி புலமை பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுவரும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து 2020, 2021 வரையான கல்வி ஆண்டில் உயர்தரம் படித்துவரும் மாணவர்களுக்கான மாதம் தோறும் 1,500 ரூபாய் உதவிக்கொடுப்பனவு வழங்கும் சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமை பரிசில் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 218 மாணவர்களும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 224 மாணவர்களும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 132 மாணவர்களும், துணுக்காய் பிரதேசத்தில் 75 மாணவர்களும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 35 மாணவர்களும், வெலிஓயா பிரதேசத்தில் 19 மாணவர்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்களெனத் தெரிவித்த அவர், இவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்கும் வரையிலான காலப்பகுதிக்கான கற்றல் செயற்பாட்டுக்காக சமூர்த்தி சிப்தொர புலமை பரிசில் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X