2021 மார்ச் 06, சனிக்கிழமை

அடைமழையால் 6 நாள்களாக போக்குவரத்து தடை

Niroshini   / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – கரியாலை, நாகபடுவான் குளம்  மற்றும் ஜெயபுரம், பல்லவராயன்கட்டு குளம் என்பன தொடர்ந்து வான் பாய்வதால், வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்த அடை மழையால், இவ்விரண்டு இடங்களில், நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்த வண்ணம் உள்ளது. இதனால், கடந்த ஆறு நாள்களுக்கு மேலாக போக்குவரத்து யாவும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரதேசங்களில் உள்ள மக்களுடைய போக்குவரத்து தேவை கருதி, பூநகரி பிரதேச சபையால் உழவு இயந்திரத்தில் பயணிகளை ஏற்றி இறக்கும், செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .