2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

’சர்வதேசத்தின் அழுத்தம் குறைந்தது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேசத்தின் அழுத்தம், தற்போது இல்லையென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும் அமைதி, நல்லிணக்கத்துக்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, சந்திரகுமாரின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்றது.

இதன்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளில், தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்னார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர் புதிய இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பிலும் நல்லிணக்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுவதாகவும் எனவே இச்சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாதெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X