2021 மார்ச் 03, புதன்கிழமை

சாந்தி எம்.பியால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுமதில் உடைந்தது

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜாவின் விசேட நிதியில், நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை சுற்றுமதில் உடைந்து விழுந்துள்ளது.

முல்லைத்தீவு - குமுளமுனை மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுமதிலே, இவ்வாறு இடிந்து விந்துள்ளது.

பருவ மழைக்கு தாக்குப்பிடிக்காத வகையில் குறித்த சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பெரலியத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துள்ள நிலையில், குறித்த பாடசாலையின் சுற்றுமதில் உடைந்துள்ளமை, கம்பெரலியத் திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளின் தரத்தையும் சோதனைக்குட்படுத்தும் வகையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக, புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .