Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளதாக மாவட்ட செயலர்; சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் குடிநீர் பிரச்சனை ஒருபாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.
பூநகரிப்பிரதேசத்தை பொறுத்தவரையில் ஏறத்தாள 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப்பிரதேசத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும், அதன் பின்னர் உவர் நீர்த்தடுப்பணைகள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டமையாலும் பூநகரிப்பிரதேசத்தைச்சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்தன.
இதனால் கடல் பெருக்குக்காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப்பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களையும் புனரமைத்து மழைநீரைத்தேக்குவதன் மூலம் நிலங்களின் உவர்த்;தன்மையைப்போக்கி விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago