2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால் 5,000 ரூபாய் தருவார்களா?’

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

மதுபோதையில் கடமைசெய்யும் பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால், தமக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவார்களேயானால் எத்தனையோ பொலிஸாரைக் காட்டிகொடுப்போமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூறன் தெரிவித்தார். 

வவுனியாவில், நேற்று  (08) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அதிகளவான விபத்துகள் இந்த மாவட்டத்திலே அல்லது மாகாணத்திலே இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் இங்கு சாரதி பயிற்சி நிலையங்கள் சரியான முறையிலே இயங்குவதில்லையெனவும் கூறினார்.

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுகொள்வதற்கான  பரிசோதனையில் சித்தி பெறுவதற்கு, 5 ஆயிரம் ரூபாய் தருமாறு சாரதி பயிற்சி நிலையங்களில் கேட்கப்படுவதாகத் தெரிவித்த அவர்,  இது தவறான விடயமெனவும் கூறினார்.

அத்துடன் மது போதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை பிடித்தால் பொலிஸாருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கபணம் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆனால் பொலிஸாரே இன்று மதுபோதையுடன் கடைமையில் இருந்துதான் சாரதிகளை கைதுசெய்கிறார்களெனவும் குற்றஞ்சாட்டினார்.

அவ்வாறான பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால் 5 ஆயிரம் ரூபாய் பணம் தமக்கு தருவார்களேயானால், எத்தனையோ பொலிஸாரைக் காட்டிகொடுப்போமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .