2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்த இரு மாணவிகள்,  தனியார் வகுப்புக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், அவர்களை தாக்கி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சித்த சந்தே நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிராம மக்களால் காப்பாற்றப்பட்ட மாணவிகள் இருவரும், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம்  தொடர்பாக தெரியவருவதாவது,

அடம்பன்   பகுதியை சேர்ந்த உயர்தரத்தில் கற்கும் இரு மாணவிகள்மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்போது, அவர்களை வழிமறித்த நபர் ஒருவர்,  தகாத விதத்தில் நடந்துகொண்டதுடன்,  மாணவி ஒருவரை குளத்தில் மூழ்கடிக்கவும் முயன்றுள்ளார்.

இதன்போது, தப்பிச்சென்ற மற்றைய மாணவி கிராம மக்களிடம் விடயத்தை தெரிவித்துள்ளதையடுத்து, கிராம மக்கள் தாக்குதலுக்கு உள்ளான மாணவியை மீட்டுள்ளனர்.

பொதுமக்களை கண்டு சந்தேக நபர் குளத்தில் பாய்ந்து  தப்பித்துச்  சென்ற நிலையில் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன்,  நேற்று (7) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்போது, சந்தேக நபரை எதிர் வரும்  18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், 18 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு குறித்த நபரை உள்ளாக்குமாறும்  அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--