Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதி எங்கும் நாளை (28) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், தற்போது நீதிமன்றங்களால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் 6 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, 46 பேருக்கு தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுவெளியில் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகள் எங்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பிரசன்னம் என்றுமில்லாத அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முற்படுகின்ற மாவீரர் துயிலும் இல்ல வளாகங்கள் மற்றும் வழமையான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நகர்ப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏற்கெனவே இருந்த இராணுவ சோதனைச் சாவடிகளை விட விசேடமாக பொலிஸ் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர், மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025