2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

‘வான் வெள்ளம் பரவாமல் இருக்க வேலைத்திட்டம்’

Niroshini   / 2021 ஜனவரி 21 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நடராசா கிருஸ்ணகுமார்

அக்கராயன் குளத்தின் வான் வெள்ளம், பரவாமல் இருப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததாக, கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரி.ரிசியந்தன் தெரிவித்தார்.

அக்கராயன் குளத்தின் வான் வெள்ளம் சமாதானபுரம் வயல் வெளிகளை மூடிப் பாய்வது வருவது வழமை. ஆனால், இம்முறை அவ்வாறு இடம்பெறவில்லை. இந்நிலையில், இதற்கான காரணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்ந்துரைத்த அவர், அக்கராயன் குளத்தின் வான் பகுதியில் இருந்து நீர்த் தடுப்பணை பகுதிகளுக்கு இடையில் நீர்த்தடைகளை அகற்றியிருந்தோமென்றார்.

அத்துடன், தாழ் பாலத்தில் இருந்தும் மிகக் குறுகிய தூரத்துக்கு ஆற்றை துப்புரவு செய்திருந்ததாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக வான் வெள்ளம் ஒரு சீரான இடைவெளியில் வெளியேறியதன் காரணமாக, சமாதானபுரம் வயல் வெளிகளுக்குள் நீர் பரவில்லை எனவும் கூறினார்.

ஆனால், அக்கராயன் தாழ் பாலத்தில் இருந்து குடமுருட்டி வரையான எட்டு கிலோ மீற்றர் வரையான அக்கராயன் ஆறு துப்புரவு செய்யப்பட வேண்டுமென்று தெரிவித்த அவர், இதற்கு முதலில் மூன்று மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றதெனவும் கூறினார்.

இந்த ஆறு துப்புரவு செய்யப்படாததன் காரணமாகவே, கண்ணகைபுரம் போன்ற வயல் நிலங்கள் ஆண்டு தோறும் நீரில் மூழ்கி அழிவுகளை எதிர்கொள்வதாகவும ரிசியந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, அக்கராயன் குளத்தின் கீழான விவசாயிகள் அக்கராயன் ஆற்றைத் துப்புரவு செய்து, ஆண்டு தோறும் வான் வெள்ளத்தால் பெருமளவில் அழியும் நெல்லைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, நெற்செய்கைக் கூட்டங்களை நடத்துகின்ற அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .