2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

'உணவு ஒவ்வாமையினாலேயே வைத்தியர்கள் சுகயீனம்'

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

உணவு ஒவ்வாமையினாலேயே வைத்தியர்கள் சுகயீன விடுமுறையை பெற்றுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையிலுள்ள ஐந்து வைத்தியர்களின் உள்ளக முரண்பாடுகளினால் சுகயீன விடுமுறையை கோரியுள்ளதாகவும் இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வியடம் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கிடையில் ஏற்பட்ட உள்ள முரண்பாடுகளால் வைத்தியர்கள் ஐவர் சுகவீன விடுமுறை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துகள் அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக சிலரால் புனையப்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கு கடந்த வியாழக்கிழமை மதிய உணவின் பின்னர் ஏற்பட்ட உணவு ஒவ்வாமயினாலேயே சுகவீன விடுமுறையை பெற்றுள்ளனர். கர்ப்பிணிகள் தொடர்பான வைத்திய சேவைக்காக 7 வைத்தியர்கள் உள்ள நிலையில் ஐவர் இவ்வாறு உணவு ஒவ்வாமையினால் விடுமுறையை பெற்றுள்ளனர்.

இந்த  நிலையில் எமது சங்கத்தின் ஊடாகவும் ஏனைய வைத்தியர்களின் ஒத்துழைப்புடனும் வைத்திய சேவையை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவான் நடவடிக்கையை மேற்கொண்டு சேவையை வழங்கி வருகின்றோம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X