2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 06

Super User   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1683: அமெரிக்காவில் முதல் தடவையாக 13 ஜேர்மனிய குடும்பங்கள் குடியேறின. இதனால் இன்றைய தினம் ஜேர்மன் அமெரிக்க தினமாக கொண்டாடப்படுகிறது.

1789: பிரெஞ்சு புரட்சியின்போது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெற்ற பெண்களின் எழுச்சிப்போராட்டத்தையடுத்து, 16 ஆம் லூயி மன்னன் வேர்செய்ல்ஸிலிருந்து பாரிஸ் நகருக்குத் திரும்பினார்.


1889: தோமஸ் அல்வா எடிசன் முதல்தடவையாக அசையும் படத்தை காண்பித்தார்.


1908: பொஸ்னியாவையும் ஹேர்சகோவினாவையும் ஆஸ்திரியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.


1973: சிரியா, எகிப்து ஆகிய நாடுகளின் படைகள் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் நடத்தின.

1977: மிக்-29 ரக போர் விமானம் முதல் தடவையாக பறந்தது.

1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்த முதல் பாப்பரசரானார்.


1981: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், இராணுவ அணிவகுப்பொன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


1987: பிஜி குடியரசாகியது


2000: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் இராஜினாமா.


2000: ஆர்ஜென்டீன ஜனாதிபதி கார்லோஸ் அல்வாரெஸ் இராஜினாமா.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .