2021 மே 12, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 03

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1690: அமெரிக்காவில் முதலாவது நாணயத்தாள், மசாசூசெட்ஸ் கொலனியினால் வெளியிடப்பட்டது.

1783: அமெரிக்காவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.

1917: ஜேர்மனியுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

1930: வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நியூஸிலாந்து ஹேவ்க் குடாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 258 பேர் பலி. இதுவே நியூஸிலாந்தின் மிக அதிக மரணங்களை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாகும்.

1966: சோவியத் யூனியனின் லூனா- 9 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.

1969: எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற பலஸ்தீன தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யஸீர் அரபாத் நியமிக்கப்பட்டார்.

1995: விண்வெளி வீராங்கனை எய்லீன் கொலின்ஸ் விண்வெளி ஓடத்தை ஓட்டிச் சென்ற முதலாவது பெண்ணானார்.

2007: பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 135 பேர் பலி, 339 பேர் காயம்.

2010: சுவிட்ஸர்லாந்து சிற்பி அல்பர்ட்டோ கியாகொமட்டி செதுக்கிய சிற்பம் 65 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .