2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (12.12.2010 – 18.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (12.12.2010 – 18.12.2010)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

குழந்தையாக செயல்படும் குணமும் ஆன்மீகம், தெய்வீக அனுஷ்டானங்களில் அதிக பற்று காட்டும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும். நண்பர்களுடன் சுற்றுலா பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். பெண்களின் சில உதவிகள் கிடைக்கக்கூடும். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை தவிர்க்கவும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். இசையில்  நாட்டம் அதிகரிக்கும். வியாபார விரித்திக்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்ளவேண்டிருக்கும். மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் இறைவன் மீது அதிக நாட்டம் செலுத்துவதால் கவலைகள் மறைந்து நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எப்பொழுதும் மற்றவர்களை கவரும் வகையில் வாழ்க்கையை அமைத்து கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், இல்லாவிடின் சில பிரச்சினைகளை எதிர்நோக்கநேரிடும். குடும்ப உறவினர்களுக்கிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். வெளிப்பிரயாணங்கள் செல்வதனால் புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம். தொழிலில் நவீன நுட்பங்களை செயல்படுத்தும்போது சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். பெண்களுடன் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். அழகிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்பாராத பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், அவதானத்துடன் செயல்படவும். வார இறுதியில் புண்ணியதலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைப்பதுடன் மனதில் சோர்வுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: சிவன் (சந்திரன்)
வழிபாடு: வெள்ளை, இளம் பச்சை




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

நகைச்சுவையாக பேசும் திறனும் சாதாரணமான விடயத்தில் கூட புத்திசாலித்தனமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த அரசாங்க ஊழியர்களின் சலுகைகள் கிடைக்கக்கூடும். மனதில் சிறு சலனங்கள் வந்து நீங்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். பணநெருக்கடி ஏற்படக்கூடும். பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை, குடும்பத்தில் சொந்தங்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்குகளுக்காக பயணங்கள் செல்வதனால் புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கக்கூடும். தொழிலில் நவீன சாதனங்களை கொண்டு மேன்மை அடையலாம். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வார இறுதியில் பகைவர்களின் சிக்கல்களிருந்து விலகி நிற்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நியாயத்துக்கு குரல் கொடுக்கும் தன்னம்பிக்கையோடு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலம் அதிக லாபத்தை பெற்று கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், மேலும் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியார்களின் அன்பும் ஆதரவும் நம்பிக்கை ஏற்படுத்தும். பிறரின் உதவிகள் நாடுவதை தவிர்க்கவும். உயரதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். நாவடக்கத்துடன் செயல்படவும். காணாமல்போன பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. அரச வேலைவாய்ப்பு தேடிவரக்கூடும். நட்பு வட்டம் விரிவடையும்;. வார இறுதியில் இறைவனை முழு மனதோடு வழிபட்டு வருவதனால் தீமைகள் விலகும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்;க்கவும்
வழிபாடு: பிரம்மா




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தப்பு செய்தவர்களை தட்டி கேட்க்கும் நீங்கள் உறவினர் காட்டிலும் நண்பர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் போட்டிகள் விலகி நவீன தொடர்புகள் தேடி வரக்கூடும், இதனால் பணவரவு ஏற்படும். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள்.  பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் பெண்களின் சலுகை அதிகரிக்கக்கூடும். சகோதரர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். புதிய சாதனைகளை மேம்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். இசையில் நாட்டம் அதிகரிக்கும். சில பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயல்படவும். பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம். வார இறுதியில் தோல்விகளை கண்டு துவளாமல் இறைவனை வழிபடுவதால் மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 13ஆம் திகதி காலை 12.23 மணியிலிருந்து டிசெம்பர் 16ஆம் திகதி மாலை 12.20 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தொட்ட காரியத்தை துலக்கும் ஆற்றல் கொண்ட கவர்ச்சியான குணமுடைய கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் பணவரவுகளில் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், இதனால் பிறரின் சலுகையை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும், தூரதேசத்திலிருந்து செய்திகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். பெண்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வியாபார வளர்ச்சிக்காக நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரவாய்ப்புண்டு. பகைவர்களினால் சில பிரச்சினைகள் தேடிவரக்கூடும், நிதானத்துடன் செயல்படவும். நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் நீண்ட நாட்களின் பயனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.      

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 16ஆம் திகதி மாலை 12.20 மணியிலிருந்து டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 09.47 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் புன்னகையுடன் பேசி பிறர் மனதை புரிந்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் தெய்வீக சிந்தனைகள் மற்றும் நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நண்பர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். அரசாங்க ஊழியர்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் தேடி வரகூடும். வியாபார முன்னேற்றத்திற்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டிருக்கும். புதிய திட்டங்களில் சில தடைகள் ஏற்படக்கூடும். விடாமுயற்சியுடன் செயல்படவும். கேட்ப்போர் பேச்சுகளை கேட்டு நடப்பதால் மனசங்கடங்கள் ஏற்படும். நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும். தூய ஆடைகளை அணியலாம். சரும உபாதைகள் வந்து நீங்கும், தேக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வார இறுதியில் நண்பர்கள் இன்ப துன்பங்களின்போது ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் பெண்களுடன் அதிக பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். நாவடக்கம் அவசியம். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் பகை ஏற்படக்கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மேலும் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சியை தரும். எதிர்பாராத நல்ல செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். புண்ணிய தலங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் நிதானமாக திட்டமிட்டு வழக்கமான பணிகளை செய்து வருவது சிறப்பானதாகும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அமைதியும் சாந்தமும் குடிகொண்ட முகத்தோடு இனிமையாக பேசி மற்றவர்களை உள்ளம் நெகிழ வைக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நண்பர்களுடன் தூரபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் நவீன திட்டங்களை கையாளுவதனால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதாரவும் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் புதிய செய்திகளை கேள்விப்படுவீர்கள். உயர் உத்தியோகத்தருடன் அதிக பேச்சுகளை தவிர்க்கவும், இல்லாவிடின் மனசங்கடங்களை எதிர்நோக்க நேரிடும். இசையில் அதிக ஆர்வம் காட்டுதல். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். வார இறுதியில் நிதானமாக சிந்தித்து செயல்படுவதனால் முன்னேற்றம் அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடின உழைப்பால் மட்டுமே முன்னேறலாம் என்பதை முழு மூச்சாக கொண்டு சிகரம் தொடுகிற மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிய தொழில் தொடங்க உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். மனதில் சிறு பயங்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும். கடின உழைப்புடன் செயல்படுவதனால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். வெளிபிரயாணங்களின்போது பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். விநோத விளையாட்டுகளுக்காக அதிக செலவுகள் ஏற்படும்,  சேமிப்பில் கவனம் செலுத்தவும். நண்பர்களின் மூலம் தகவல் வந்து சேரும். வார இறுதியில் பெரியார்களின் உபதேசங்கள் நம்பிக்கை தரக்கூடும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்த்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பகைவர்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். அரசாங்க துறையிலிருந்து சில வேலைவாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். சில பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், அவதானத்துடன் செயல்படவும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் உற்சாகத்துடன் தொடங்கலாம். எதிர்பார்த்த பணவரவு உரிய நேரத்தில் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வார இறுதியில் சஞ்சலங்கள் யாவும் தெளிவு பெறுவதுடன் துன்பங்கள் மறையும்.  

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

உறுமீனைப்போல் காத்திருக்கும் உறுதியுள்ளமும் தோல்விகளை கண்டு எதிர்நீச்சல் போடும் மீனராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் அன்றாட வேலைப்பணிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பணநெருக்கடிகள் ஏற்படக்கூடும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் தேவை. விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல். பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும். ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும். ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் சங்கடங்களை எதிர்நோக்கநேரிடும். நல்ல செயல்களில் ஈடுபடுவதனால் மனஅமைதி கிடைக்கும். நவீன திட்டங்களில் தடைகள் ஏற்படக்கூடும், சிந்தித்து செயல்படவும். தூய ஆடைகளை அணியலாம். வார இறுதியில் சிறுக சேமித்து வளமுடன் வாழ வழிகிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--