2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (14.11.2010 – 20.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (14.11.2010 – 20.11.2010)  
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றமும் அதிக புத்தி கூர்மையும் நேருக்குநேர் சந்திக்கும் துணிவும் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் உள்ள போட்டிகள் விலகி வாய்ப்புக்கள் தேடி வரகூடும், இதனால் பணவரவு ஏற்படும். அன்றாட வேலைப் பணிகளை உடனுக்குடன் முடிப்பீர்கள்;. பெரியார்களின் ஆலோசனைகள்; குடும்ப உறவினர்களின் ஒற்றுமையை பலப்படுத்தும். நண்பர்கள் இன்ப, துன்பங்களின்போது ஒத்துழைப்புடன் செயற்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். சில உடல் உபாதைகளினால் மனதில் பய உணர்வுகள் ஏற்படும், எனவே மனதையும் உடலையும் பேணி காப்பது நன்று. பிரயாணங்கள் செல்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடும். பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், இல்லாவிட்டால் மனசங்கடங்கள் ஏற்படும். இக்காலகட்டங்களில் பக்தியுடன் இறைவனை பிரார்த்தனை செய்வதால் சிக்கல்கள் தீரும், கவலைகள் மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்  
வழிபாடு: பெருமாள்


கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அந்தஸ்த்தும் பொலிவுமிக்க தோற்றமும் பிறருக்கு அடி பணியாதவரும் சகிப்பு தன்மையும் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் உற்றார் - உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். மேலும் பெண்களின் அனுசரிப்புக்கள் மனநிறைவை தரகூடும். வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு பணிகளை தொடங்கலாம். அழகிய ஆடை - அணிகலன்கள் பரிசாக கிடைக்க கூடும். புதிய வேலைத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் முன்னேற்றம் அடையலாம். பகைவர்களினால் சில பிரச்சினைகள் தேடிவரக்கூடும், நிதானமாக செயல்படவும். பணவரவு சாதகமாக அமையாது, கடின உழைப்பு அவசியம். உடலில் சில சரும உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக்கூடும். புதிய நட்புக்கள் தேடிவர வாய்ப்புண்டு. இக்காலகட்டங்களில் பிறர் நன்மை நினைக்கும் உள்ளம் இருந்தால் காலம் மாறி கவலைகள் தீரும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)   


மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

புன்னகை தவழும் முகமும் பிறரை கவரும் வசிகரமும் காரியங்களை எளிதில் சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் வரவுக்கு ஏற்ற பொருள் செலவுகளை மேற்கொள்வீர்கள். வியாபார முன்னேற்றம் சில அதிகாரிகளின் செயல்களினால் பின் தள்ளப்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத திருட்டுக்கள் ஏற்பட இடமுண்டு, அவதானத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் ஒன்றிணைந்து புதிய திட்டங்களை தொடங்குவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும், இதனால் பணவரவு ஏற்படும். பகைவர்களுடன் அனாவசிய பேச்சுக்களினால் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் கிடைக்கலாம். குலதெய்வ வழிபாடுகள் குடும்ப சூழலை மாற்றுவதுடன் உறவினர்களின் அன்யோன்யத்தை பலப்படுத்தும். இக்காலகட்டங்களில் இறைவனை நாடுவதால் இருளிருந்து ஒளியை பெற்று வாழ வழிகிடைக்கும்.  

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: பார்வதி


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சுறுசுறுப்பும் விழிப்புணர்வும் அழகிய தோற்றமும் இனிய சுபாவும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில்; பெண்களின் அன்பான பணிவிடைகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு அரசாங்க உதவிகள் தேடிவர வாய்ப்புண்டு, கடின முயற்சியுடன் வேலைகளை முன்னெடுப்பதன் மூலம் அதிக லாபத்தை பெற்றுகொள்ளலாம்;. சில உயர் உத்தியோகத்துருடன் சுமுகமான உறவை வைத்து கொள்வது நல்லது, இல்லாவிடின் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். குடும்பத்தில் உறவினர்களினால் பொருள் வரவு சேரும், விநோத விளையாட்டுகளில் அதிக உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல்நலம் பாதிப்படைய கூடும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். இக்காலகட்டங்களில் இறை அருளால் குறைகள் தீர்ந்து நிறைகளை பெறலாம்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)   

சந்திராஷ்டமம்:
நவம்பர் 13ஆம் திகதி காலை 03.32 மணியிலிருந்து நவம்பர் 16ஆம் திகதி மாலை 04.11 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும் வாக்குவான்மையும்; வணங்கா தன்மையும் கொண்ட சிம்மா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் புதுமையான பொருட்களை காணகிடைக்கும். தொழில் பணியாளர்களின் உழைப்பு அதிகரிப்பதுடன் தகுந்த ஆதாயங்கள் கிடைக்க கூடும். குடும்பத்தில் உற்றார் - உறவினர்கள் விட்டுகொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி பெருகும். பெண்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்படகூடும்;. நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும்.  நண்பர்களுடன் விநோத விளையாட்டுகளின் ஈடுபடும்போது அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். வெளிபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும், இதனால் அதிர்ஷ்டங்கள் ஏற்படக்கூடும். இசையில் அதிக நாட்டம் காட்டுவதால் மனதில் உள்ள சோர்வுகள் நீங்கும். இக்காலகட்டங்களில் சிறுக சேமித்து சிறப்பாக வாழ்வதற்கு பெரியார்களின் ஆலோசனைகள் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்:
நவம்பர் 16ஆம் திகதி மாலை 04.11 மணியிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி காலை 03.42 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எளிமையும் வலிமையும் இணைய உள்ளத் துணிவோடும் உண்மைக்கு முதலிடம் கொடுக்கும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் அழகிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்க கூடும். குடும்பத்தில் பெண்களினால் சுபகாரியங்கள் நடைபெறும், விசேடமாக உறவினர்களின் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விபடுவீர்கள். கூட்டு தொழிலை விரிவுபடுத்த அரச ஊழியர்களின் மூலம் சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு. நண்பர்களுடன் பொழுதுபோக்குகளுக்காக சுற்றுலா பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் அதிக செலவுகள் ஏற்படகூடும். வியாபாரத்தில் மந்தநிலை மாறி புதிய தொடர்புகள் தேடிவர வாய்ப்புண்டு. சில உஷ்ண சம்பதமான உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும். இக்காலகட்டங்களில் தெய்வீக சிந்தனைகள் கஷ்ட, நஷ்டங்களை சுலபமாக மாற்றும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
நவம்பர் 18ஆம் திகதி காலை 03.42 மணியிலிருந்து நவம்பர் 21ஆம் திகதி மாலை 12.53 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

நீதியையும் நேர்மையையும் துணையாக கொண்டு காரியத்தில் ஈடுபட்டு கடமையை செய்யும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் பகைவர்களினால் சிறு தோல்விகள் ஏற்படக்கூடும், நிதானமாக செயல்படவும். பணவரவுகள் குறைவாக காணப்படும், இதனால் பிறர் உதவிகள் நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படகூடும். புதிய காரியங்களை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு அரசாங்க சலுகை தேடிவர வாய்ப்புண்டு. பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், இல்லாவிட்டால் மனசங்கடங்களை எதிர்நோக்க நேரிடும். அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படகூடும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் மகிழச்சியான செய்திகள் வந்து சேரும், தூய ஆடைகளை அணிந்து புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: பார்வதி


 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

அறிவு கூர்மையும் அடக்கமும் மற்றவர்க்கு ஆலோசனை கூறும் மதி மந்திரியாகவும் வலம்வரும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் மூலம் அழகிய ஆடை - ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். பெண்களின் அன்பும் அக்கறையும் மனதில் கவலை போக்கி உற்சாகத்தை தரும். அறுசுவை உணவுகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களது இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நவீன சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். உயர் அதிகாரிகளுடன் சுமுகமான உறவை வைத்து கொள்வதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்தி கிடைக்ககூடும். சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும். மேல் உத்தியோகத்தரால்; சில கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு, நாவடக்கத்துடன் செயல்படவும். இக்காலகட்டங்களில் இறைவன் அருளால் துன்பங்கள் நீங்கி துணிவுடன் செயல்படலாம்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்:  கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்   
வழிபாடு: பிரம்மா
                    

 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அமைதியும் சாந்தமும் குடிகொண்ட முகத்தோடு இனிமையாக பேசி மற்றவர்களை உள்ளம் நெகிழ வைக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர்களினால் சங்கடத்துகுரிய சம்பவங்கள் நடைபெறக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் உற்றார் - உறவினர்களுடன் வெளிபிரயாணங்கள் செல்வதால் அனுகூலம். பெண்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும், நாவடக்கம் அவசியம். வியாபாரத்தில் உள்ள போட்டிகள் விலகி புதிய வேலைதிட்டங்களை கையாளுவீர்கள், இதனால் பணவரவு ஏற்படும். நண்பர்களுடன் விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை. விசித்திரமான பொருட்களை காணகிடைத்தல். பெரியார்களின் உபதேசங்கள் மனதில் நற்பண்புகளை வளர்க்க உதவும். இக்காலகட்டங்களில் ஆன்மீக சிந்தனைகள் மனதில் உள்ள சங்கடங்களை நீக்கி அமைதியான சூழலை ஏற்படுத்தும்.    

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)

                  

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

காரியத்தில் கண்ணாயிருந்து கடின முயற்சியால் முன்னேற நினைக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் அரசாங்க உதவிகள் மூலம் நவீன திட்டங்களை முன்னெடுக்கலாம், இதனால் பணவரவு அதிகரிக்கும். இசையில் அதிக கவனம் செலுத்துவதால் மன ஆறுதல் கிடைக்கும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். நண்பர்களினால் இன்பகரமான செய்திகளை கேள்விபடுவீர்கள். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை தவிர்க்கவும். தொழிலில் அதிக முயற்ச்சியுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை ஏற்படுவதுடன் தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். பெண்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். இக்காலகட்டத்தில் வெளி பிரயாணம் பயணிப்பதால் மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்    
வழிபாடு: பெருமாள்


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பிறர் விடயங்களில் தலையிடாமல் தன்னடக்கத்துடன் நன்மையான பணிகளை செய்யும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் புதிய காரியங்களுக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள், பணவரவுகள் சற்று தாமதத்தை ஏற்படுத்த கூடும், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். குடும்பத்தில் சகோதரர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்க கூடும். பெண்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும், தொழில் அதிகாரிகளின் போட்டிகளினால் தோல்விகள் ஏற்பட வாய்ப்புண்டு, தீய நண்பர்களுடன் அநாவசிய போச்சுக்களினால் மனஸ்தாபம் உருவாகும், வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்கவும், உஷ்ண சம்பதமான உபாதைகள் வந்து நீங்கும், உடல் நலனை பாதுகாக்கவும். சில எதிர்பாராத திருட்டுக்கள் ஏற்படக்கூடும், இதனால் மனதில் பயங்கள் தோன்றி மறையும், இக்காலகட்டங்களில் முழு மனதோடு தெய்வ அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் தேவையற்ற குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு    
வழிபாடு: பார்வதி


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் அதிக அன்பை எதிர்பார்க்கும் மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் புதிய தொடர்புகளை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புதிய வேலைப்பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிக்கலாம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு, குடும்பத்தாருடன் சென்று பூஜை அனுஷ்டானங்களை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். தூய ஆடைகளை அணியலாம். ஆரோக்கியமான உணவுகள் மனதிருப்தியை தரகூடும். திறமையான காரியங்கள் கையாளுவதற்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும், அயல்தேசங்களிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். பணவரவுகளுக்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்ள வேண்டிருக்கும். இக்காலகட்டங்களில் ஒவ்வொரு செயல்களை சிந்தித்து செயல்பட்டால் மேன்மை பெறலாம்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--