2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (18.11.2012 - 24.11.2012)

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தவார பலன்கள் (18.11.2012 - 24.11.2012)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9-பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் பல புதிய வழிகள் உருவாகும். இதனால் இலாபம் ஏற்படும் மற்றும் அழகிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில சுபகாரியங்கள் நடைபெறும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியில் இருந்து இன்பமான செய்திகள் வந்து சேரும். மற்றும் வார இறுதியில் உடல் நிலை மோசமடையும் மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். வீண் சிரமங்கள் ஏற்படும். மயக்கம் காணப்படும் திருடர்களினால் பயம் ஏற்படும். மேலும் பணத்திற்கு  பிரச்சினைகள் உண்டாகும். வெளியூர் பிரயாணம் செல்லும் சூழ்நிலை உருவாகலாம்.
அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு உறவினர்களிடையே அந்நியோன்யம் கூடுதலாக காணப்படும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகளுடன் ஆரோக்கியமான போட்டிகள் காணப்படும். காரியங்களில் வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில்  மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். இசையில் ஆர்வம் காணப்படும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். வார இறுதியில். உடல் நிலை மோசமடைந்து காணப்படும் மனதில் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் தடைபடும். பிறருடைய உதவி  எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே வார இறுதியில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே...!  
        
இந்த வாரம் உங்களுக்கு வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலில் உஷ்ணம் காய்ச்சல் தலைவலி போன்றவை ஏற்படும். வீண் மருத்துவ செலவுகள் உண்டாகும். சாப்பாட்டில் வெறுப்பு காணப்படும்  இதனால் உடல் நலம் பாதிப்படையும். மனதளவில் கஷ்டம் ஏற்படும். வார இறுதியில் மன ஆறுதல்கள் கிடைக்ககும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் நிலவும் இதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்  புதிய முயற்சிகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். தனலாபம் உண்டாகும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும் அயல்தேசங்களிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் வலுவடையும்.
அதிர்ஷ்ட திகதி: 22
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்

நவம்பர் 18ஆம் திகதி காலை 07.24 மணியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி மணி காலை 11.26 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு வேண்டாத பேச்சுக்களால் பிரச்சனைகள் உருவாகும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியில்  போய் முடியும். பணத்தினால்  பிரச்சனை உண்டாகும்;  வீட்டை விட்டு வெளியில் அலையும் சூழ்நிலை உருவாகும். சாப்பாட்டில் வெறுப்பு தோன்றும்  . மனதில் சோர்வுகள் தோன்றும். வார இறுதியில் பெண்களினால் மகிழ்ச்சி  உண்டாகும். பணம் ஈட்டுவதில் ஈடுபாடு காணப்படும் வெளிநாட்டில் இருந்து செய்திகள்  வரும். பணலாபம்  உண்டாகும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும் வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்

நவம்பர் 20ஆம் திகதி காலை 11.26 மணியிலிருந்து நவம்பர் 22ஆம் திகதி மணி மாலை 07.01மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு மகான்களுடைய  தரிசனங்கள் கிடைக்கப்பெறும். பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும் அதிகாரிகளிடையே சுமூகமான பேச்சு வார்த்தை உண்டாகும். உடன் பிறந்தவர்களுடைய வருகை ஏற்படும் இதனால் மகிழ்ச்சி நிலவும். வார இறுதியில பெண்களுடன் விவாதங்களில் ஈடுபட நேரிடும். மற்றவர்களினால் பிரச்சனை உண்டாகும். துன்பங்கள் நிகழ  நேரிடும் மனம் சஞ்சலம் அடையும். வேண்டாத செலவுகளால் வேதனையடைய நேரிடும் மற்றும் மேலும் எந்த ஒரு காரியத்திற்கும் முன் நிற்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்

நவம்பர் 20ம் திகதி மாலை 07.01மணியிலிருந்து நவம்பர் 24ஆம் திகதி மணி காலை 05.39 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை கண்ணியம் நேர்மை கனிவான உள்ளம் சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் மகிழ்ச்சியான செய்திகள் வரும் தனலாபம் காணப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். காரியங்கள் வெற்றியடைதல் தீயவர்களின் நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் தொழிலில் ஏற்படும் நஷ்டங்ளைத் தவிர்க்கலாம். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைக்கும் இதனால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். இடையிடயே பல வகையில் சிக்கல்கள் ஏற்படும். பொருள்கள் திருட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம் எனவே கவனம் அவசியம்.  மனதளவில்  கஷ்டம் தோன்றும். ஆனாலும் இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்றும் உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு முச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே...! 
  
இந்த வாரம் உங்களுக்கு உடல்  நிலையில் பாதிப்புகள் காணப்படும். பணப்பிரச்சனை ஏற்படும் தலைவலி  காய்ச்சல் மற்றும் பயம் போன்றவை  உண்டாகும்  தீயவர்களுடைய நட்பினால்  நஷ்டங்கள் உண்டாகும்  சிக்கல்கள் காணப்படும். பொழுது போக்குகளில் கவனம் தேவை சுற்றத்தினர் நண்பர் வருகை காணப்படும்  ஆடை ஆபரணங்கள் சேகரித்தல் நண்பர்களுடன் வெளியில் செல்லும் நிலை உருவாகும் . மேலும்   நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும்  சுகமான உணவு மனதளவில்  பெண்களுடன் விவாதங்கள் ஏற்படும் பிரயாணம் செல்லும் நிலை உருவாகலாம் இதனால் லாபம் கிடைக்கும் .  வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும்  எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே...!     
                           
இந்த வாரம் செய்யும் செயல்களில் தவறுகள் உண்டாகும். மனதில் சில சஞ்சலங்கள் காணப்படும். பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். மேல் அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீண் பிரச்சினைகள் தோன்றி மறையும். வேண்டாத உணவினால் பிரச்சினைகள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். தீயவர்களின் நட்பினால் தொழில் நஷ்டமடையும். வார இறுதியில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள.; பிரயாணம் செல்லும் நிலை ஏற்படலாம். இதனால் இலாபம் அதிகரிக்கும். சுற்றத்தினர் நண்பர் வருகை இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவு இடுதல் அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல் ஆகியவை நிகழும். சுமாரான வாரம் இது.
அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் புதிய தொடர்புகள் ஏற்படும் இதனால்  வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும்.  நண்பர்களிடையே சேர்க்கை உண்டாகும். சுவையான  உணவு உண்ணும் நிலை உருவாகும். சாதுக்களின்  தரிசனம் கிடைக்கும். இதனால் மனம் அமைதி அடையும் வீண் அலைச்சல்கள் காணப்படும். வார இறுதியில் செய்யும் செயல்களில் தவறுகள் உண்டாகும் முயற்சிகள்; தோல்வியடையும். பிறருடைய உதவியை நாடும் நிலை உருவாகலாம்  உடலில் உஷ்ணம் காணப்படும். பெரியோர்களின் சந்திப்புகள் நிகழும் இதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும் மகான்களின் தரிசனம் கிடைக்கும் முயற்சிகள் அனைத்தும்  வெற்றியடையும் மகிழ்ச்சியான வாரம் இது.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே...!  
                   
இந்த வாரம் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் காரியங்கள் அனைத்தும் தடைபடும்.  வியாபாரத்தில் புதிய பிரச்சனைகள் ஏற்படும். மேலும் புதிய முயற்சிகள் செய்தல் நீண்ட தூரம் பயணம் செல்லுதல் இதனால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும் நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கும்  சுகமான உணவுகளால் மனம் மகிழ்ச்சியடையும்  மனதளவில் அலைச்சல் உண்டாகும் பெண்களுடன் விவாதங்கள் தோன்றும் மற்றவர்களினுடைய பிரச்சனைகளால் துன்பமடைய நேரிடும். மனம் சஞ்சலம் அடைதல் வேண்டாத செலவுகள் ஆகியவை காணப்படும்.
அதிர்ஷ்ட தேதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் வாக்குவான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே...!
  
இந்த வாரம் உங்களுக்கு அனைத்தும் தடைபடும் தொழிலில் சில வகையான பிரச்சனைகள் ஏற்படும்.  அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீணாக பிரச்சனை ஏற்படும். இருந்த போதிலும் பெரியோர்களின் சந்திப்பு நடைபெறும். சில இடங்களில் பேச்சுகளால் மனஸ்தாபம் உண்டாகும். இதனால் மனதில் பயம் உண்டாகும் வீண் அலைச்சல் காணப்படும். இடம் விட்டு வேறு இடம் மாறுதல் உண்டாகும். வார இறுதியில் சுவையான உணவு உண்ணுதல் பெண்களினால் மகிழ்ச்சிகள் காணப்படும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும் இதனால் லாபம் கிடைக்;கும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்ச்சி செய்தால் அனைத்திலும் வெற்றியடையலாம். புண்ணிய செய்திகள் கேட்டல் இதனால் மகிழ்ச்சி நிலவும் மனம் அமைதியடையும்.  
அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே...!  

இந்த வாரம் உங்களுக்கு சில வகைகளில் சிரமங்கள் உண்டாகும் இதனால் மயக்கம் ஏற்படும். மனம் சஞ்சலமடையும். வீண் மனஸ்தாபம் உண்டாகும் முயற்சிகளில் தோல்வி காணப்படும். இருந்த போதிலும் மகான்களின் தரிசனம் கிடைக்கும் இதனால் மனது மகிழ்ச்சியடையும்  சில முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும் அதிக பண லாபம் உண்டாகும். ஆனாலும் சில இடங்களில் காரியம் தடைபடுதல் காணப்படும். வியாபாரத்தில் பல புதிய வழி கிடைக்கும். இதனால் லாபம் மற்றும்  மகிழ்ச்சி ஆகியவை உண்டாகும். நல்லவர்கள் சேர்க்கைகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி  ஏற்படும்.  நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். மகிழ்ச்சியான வாரம் இது.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .