2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மாவிட்டபுரம் கந்தன் தேர்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வரலாற்று புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்திருவிழா இன்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணியளவில் கந்தன், வள்ளி, தெய்வயானையுடன் அலங்கார திருத்தேர் ஏறி வெளி வீதியுலா வந்தார்.

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனர் ஆ.நட்ராஜ், மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .