2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

கோழிக்குஞ்சு, வாத்து, பூனைகளை பராமரிக்கும் நாய்

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் பூனை, கோழிக் குஞ்சு, வாத்து, முயல் போன்றவற்றிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக நாய்கள் காணப்படும். எனவே பொதுவாக வீட்டுரிமையாளர்கள் நாயிடமிருந்து இந்த பிராணிகளை தள்ளியே வைப்பார்கள். ஆனால், பிரிட்டனில் ஒரு நாய் இந்த செல்லப்பிராணிகளை அன்புடன் பராமரிக்கும் விசித்திரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ரொட்வீலர்ஸ் வர்க்கத்தைச் சேர்ந்த டேவ் என பெயரிடப்பட்ட இந்த நாய் முயல் வாத்து, கோழி, பூனை போன்றவற்றை தாயைப்போன்று பராமரித்து வருகின்றது.

டேவிற்கு  6 வயது இருக்கும் போது அதன் உரிமையாளர் அமன்டா கொலின்ஸ் தனது வீட்டிற்கு முயலொன்றைக்  கொண்டு வந்தார்.

அம்முயலைக் கண்டவுடன் டேவ் அதன் அருகில் சென்று அம்முயலை தனது நாவினால் சுத்தப்படுத்த ஆரம்பித்தது என்று 25 வயதான அமன்டா குறித்து தெரிவித்துள்ளார். இவர் பிளக்பூல் நகரில் செல்லப் பிராணிகள் கடையொன்றை நடத்தி வருகிறார்.

'இந்த நாயும் முயலும் எப்போதும் இணைந்தே காணப்படும். அவை ஒன்றாகவே உறங்குகின்றன. அதேவேளை ஒருவருக்கொருவர் உணவை பங்கிட்டுக்கொள்வதையும் நான் பார்த்திருக்கின்றேன்' என்கிறார் அமண்டா.

'பின்பு நான் வாத்துக்குஞ்சுகளை கொண்டு வந்து சேர்த்தேன். அந்த நாய் முயலுடன் நடந்துகொள்வதைப் போல் வாத்துக்குஞ்சுகளுடன் நடந்துகொள்ள மாட்டாது என நான் நினைத்தேன். ஆனால், அது அந்த குஞ்சுகளிடம் சென்று அவற்றின் தலைகளை நாக்கினால் தடவி விட்டது.

அவற்றுக்கு நீந்துவதற்கு பழகிக்கொள்ள முடியும் என்பதற்காக நான் சிறுவர்களுக்கான நீச்சல் தடாகத்தில் நீரை நிரப்பி வைத்தேன். டேவ், நீச்சல் தாடகத்தின் அடிக்கு செல்ல வாத்துக்குஞ்சுகள் அதன் மீது ஏறிக்கொள்ளும். அவற்றுக்கு நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு சிரமம் ஏற்பட்டால் அந்த நாய் அவற்றை தனது முதுகில்  ஏற்றிக்கொண்டு வெளியில் வந்து விடும்' என அவர் மேலும் கூறுகிறார்.

டேவ்  தற்போது 7 வாத்துகள், 5 முயல்கள், 13 கோழிக்குஞ்சுகள் மற்றும் 5 முயல்கள், 13 பூனைகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றது. இதில் புதிதாக பொறி;க்கப்பட்ட கோழிக் குஞ்சுகளை இன்னும் கணக்கிடவில்லை.

பிரிட்டனின் மிகவும் உந்துதல் அளிக்கும் நாயாக டேவ் போட்டியொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தளம் மூலம் நடத்தப்பட்ட இப்போட்டியில் 600 நாய்கள் கலந்துகொண்டன.  டேவ் 265,515 வாக்குகளைப் பெற்றது.
 


  Comments - 0

 • s.athem bhawa Wednesday, 02 March 2011 04:03 PM

  மனிதர்களுக்கு இது ஒரு பாடம்

  Reply : 0       0

  xlntgson Wednesday, 02 March 2011 08:52 PM

  என்ன பாடம், வாத்து கோழி குஞ்சுகளை மடியில் வைத்துக் கொண்டு தூங்கிப்பாருங்களேன்!

  Reply : 0       0

  fahmy Thursday, 03 March 2011 12:34 AM

  ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம். ஜீவ காருண்யம் நாயினால் மனிதனுக்கு

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--