2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி, கரிகட்டை பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை நேற்று  சனிக்கிழமை மாலை முந்தல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இப்பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார் சோதனை மேற்கொண்டபோது இச்சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன், விற்பனைக்குத் தயாராக வைத்திருந்த ஒருதொகை ஹெரோயினையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் புத்தளம், முந்தல் ஆகிய பிரதேசங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடு;பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது  நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதென்று விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .