சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2020 ஜனவரி 07 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டை தேசிய அணிக்கு மாணவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்றுவரும் ஆர்.கெ. கெவின் வயது (11) என்ற மாணவனே தேசிய காலுதைச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவரும் குறித்த மாணவன் கடந்தாண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று வவுனியாவுக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அந்தவகையில் பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவரும், சர்வதேச காலுதைச்சண்டை பயிற்றுவிப்பாளருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில், பாககிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதான அரங்கத்தில் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற தெரிவாகியுள்ளார்.
வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ். நந்தகுமாரின் பயிற்சியின் மூலம் தேசிய ரீதியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி கௌரவித்திருந்த நிலையில் குறித்த மாணவன் இலங்கை குத்துச்சண்டை தேசிய அணிக்குள் இடம்பிடித்து வடக்கு மாகாணத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025