2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தியெமிடம் தோற்ற ஜோக்கோவிச்

Editorial   / 2019 நவம்பர் 13 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஐந்தாம்நிலை வீரரான டொமினிக் தியெமிடம், உலகின் இரண்டாம்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தோல்வியடைந்துள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற ஒஸ்திரியாவின் டொமினிக் தியெமுடனான பியொன் பொரி குழுப் போட்டியொன்றின் டைபிரேக்கர் வரை சென்ற முதலாவது செட்டை 7-6 (7-5) என்ற ரீதியில் சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் கைப்பற்றினார்.

எனினும், இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றிய டொமினிக் தியெம், டைபிரேக்கருக்கு சென்ற தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 1-4 என பின்தங்கியிருந்தபோதும், மீண்டு வந்த 7-6 (7-5) என்ற ரீதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டார்.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற பியொன் பொரி குழுவின் மற்றைய குழுப் போட்டியில் உலகின் எட்டாம்நிலை வீரரான மட்டியோ பெரெட்டெனியை 7-6 (7-2), 6-3 என்ற நேர் செட்களில் உலகின் மூன்றாம்நிலை வீரரான ரொஜர் பெடரர் வென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .