2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பத்து விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலியா அபார வெற்றி

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 இந்திய அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களி னால் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமிடை யிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று முன்தினம் மும்பை வாங்கடே மைதானத்தில் நடை பெற்றது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக் கொண்டார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் விக்கெட் 5ஆவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹிட் சர்மா 10 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். 

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் சிறந்த இணைப்பட்டத்தை புரிந்தார். இருவரும் இணைப்பாட்டமாக 121 ஓட்டங்களைப் பகிர்ந்துகொள்ள, இந்திய அணி வலுவான நிலையை அடைந்தது. இந்நிலையில் கே.எல் ராகுல் 47 ஓட்டங் களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 74 ஓட்டங்களுடன் அடுத்த ஓவரிலேயே ஆட்ட மிழக்க தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் விராட் கோஹ்லி 16 ஓட்டங்களுடனும், ஷிரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இந்திய அணி 164 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

இந்நிலையில் 6ஆவது விக்கெட்டுக்காக இணைந்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தது. இருவரும் இணைப்பட்டமாக 49 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். ரவீந்திர ஜடேஜா 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மீண்டும் அடுத்த ஓவரில் ரிஷப் பண்ட் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க இந்திய அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கேன் ரிச்சர் ட்சன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அடம் ஸம்பா மற்றும் 

அஷ்டன் அகார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

256 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்குச் சவால் கொடுத்தனர். ஆரம்பத்திலிருந்து ஓவர்களுக்கு ஏற்ற ஓட்ட வீதத்தில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணியின் வெற்றிக்கு மேலும் வலுச்சேர்த்தனர். 

அவுஸ்திரேலிய அணியின் நம்பிக்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் ஒருநாள் சர்வதேச அரங்கில் (3 சிக்ஸர்கள், 17 பௌண்டரிகளுடன்) தனது 18ஆவது சதத்தை பூர்த்தி செய்ய மறுமுனையில் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் ஒருநாள்

சர்வதேச அரங்கில் (2 சிக்ஸர்கள், 13 பௌண்டரிகளுடன்) தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் இருவரின் சதங்களுடன் அவுஸ்தி ரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 37.4 ஓவர்கள் நிறை வில் வெற்றியிலக்கை கடந்தது. 

இந்திய அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் விளையாடியிருந்தும் அவுஸ்திரேலிய

அணியின் ஒரு விக்கெட் டையேனும் கைப்பற்ற முடியவில்லை. நடுவரினால் டேவிட் வோர்னருக்கு ஒருமுறை ஆட்டமிழப்பு வழங்கப் பட்டாலும் அவுஸ்திரேலிய அணியின் மீள்பரிசீலனை மூலம் அது ஆட்டமிழப்பு இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அவுஸ்திரேலிய அணியின் இவ் அபார வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் அவ்வணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக சதமடித்த டேவிட் வோர்னர் தெரிவானார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

இந்தியா – 255 (49.1) – ஷிகர் தவான் 74 (91), கே.எல் ராகுல் 47 (61), மிட்செல் ஸ்டார்க் 3/56 (10), கேன் ரிச்சர்ட்சன்  2/43 (9.1), பெட் கம்மின்ஸ் 2/44 (10)

அவுஸ்திரேலியா – 258/0 – டேவிட் வோர்னர் 128 (112), ஆரோன் பிஞ்ச் 110 (114) 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .