2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஓராண்டு காத்திருந்த சல்மான் கான்.. ஏன் தெரியுமா?

J.A. George   / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபுதேவா இயக்க  பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘ராதே’ படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். 

இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பொலிவுட் படம் இதுவாகும். 

ராதே படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை கடந்தாண்டு ஈகைத் திருநாளன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. 

இதனிடையே படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டு என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ராதே படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என சல்மான் கான் அறிவித்துள்ளார். 

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இப்படம் இந்தாண்டு ஈகைத் திருநாள் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் ஓராண்டு காத்திருந்து படத்தை திரையரங்குகளில் வெளியிடும் சல்மான் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .