2020 பெப்ரவரி 17, திங்கட்கிழமை

கமலிடம் லொஸ்லியா விடுத்த வேண்டுகோள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:34 - 2     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கன்ஃபக்சன் அறையில் கமல்ஹாசனுடன் லொஸ்லியா பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. 

இதில் லொஸ்லியா  கூறியபோது, 'நான் ஒருசில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அது எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது. 

ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னீர்கள் என்றால் அதை நான் மனதில் வைத்து கொள்வேன்' என்று கமல்ஹாசனிடம் கூற அதற்கு கமல்ஹாசன் 'நான் பொதுவாகத்தான் கூறினேன்' என்று பதிலலித்தார்.

மேலும், 'நான் பெயர் எதுவும் சொல்லாமல் பொதுவாகத்தான் சொன்னேன்' என்று கூறிய கமல், 'பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம்' என்றும் நீங்கள் வீட்டின் உள்ளே செல்லும்போது உங்களுக்கு யாரையும் தெரியாது, அதேபோல் நினைத்து கொண்டு வெற்றிக்காக செயல்படுங்கள்' என்று கூறினார். 

கவினுடன் லொஸ்லியாவுக்கு ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பு காதலாக மாறி வருவதையும், இந்த காதலால் போட்டியில் இருந்து இருவரும் விலகி காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிவதாகவும், போட்டியில் கவனம் செலுத்திவிட்டு வெளியே வந்தவுடன் உங்கள் முடிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்ற ரீதியில் கமல்ஹாசன் பேசியதாக தெரிகிறது. 

ஆனால் தற்போது கவின், லொஸ்லியா  இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை விட காதலில் வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது.


  Comments - 2

 • Meena Swamy Sunday, 25 August 2019 06:02 AM

  Yes kamal sir is 100% correct. This is a game show not a lovers spot. And bb also should insist contestants to play games, do the tasks and not make it a lovers park. Please for god sake, bring out the takents in each and everybody. Dont show only kavin and loslyia, which is very irritating. Kasturi had lot of talents and a good sportive contestant..but you guys didnt focus on these type of contestant, which is not correct.

  Reply : 0       0

  சஜீ Sunday, 25 August 2019 07:33 AM

  லொஸ்லியாவுக்கு கவின் உண்மையா லவ் பண்ணுரார் என்று சந்தேகம் சேரனை அவருடைய காதலுக்காக ஒதுக்குகின்றார். ஏன் அவர் சாப்பிட வைட் பண்னும் போது அவர் சொன்ன காரணம் பொய். அந்த நேரம் கவினோட இருந்தார். கவின விட்டு வருவதற்கு தயக்கம்... ஒரு விடயம் அபி எவ்வளவு ஜெனியூனா சொன்னா ஐ லவ் முகின் என்று கவின விரும்புறன் என்று நேரடியா சொல்லாம படம் காட்டுறா. கவின்ல முழுமையான நம்பிக்கை இல்ல ...இப்படி ஒரு லவ் தேவையில்ல சேரன் உண்மையான ஒரு ரிலேசன் சிப்ல இருக்கின்றார்... ஆனால் லொஸ்லியா அப்படி இல்லை கவினுக்காக சேரன அப்பட்டமா விலகுகின்றார் இத ஜெனியூனா சேரண்ட சொல்லலாம் நடிக்கத்தேவையில்லை ... அவ அழுவது போல் செய்வது பொய் சாக்ஸிய பிரிச்சு இப்ப கவின கவுத்துட்டா

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .