Editorial / 2019 நவம்பர் 07 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
‛காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானபூஜா குமார், கமல்ஹாசன் உடன் ‛விஸ்வரூபம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அவரின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களிலும் நாயகியாக நடித்தார். தொடர்ந்து கமல் உடன் பயணித்து வருகிறார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் கூட வெளியாகின.
இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று(7) தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊரான பரமக்குடியில் அவருடைய அப்பா சீனிவாசனின் உருவச் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.
இதற்காக கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷ்ரா, அண்ணன் சாருஹாசன், இவரின் மகளும், நடிகையுமான சுஹாசினி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்தித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
அதேசமயம் இந்த குடும்ப விழாவில் குடும்ப உறுப்பினர்கள் உடனான புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பூஜா குமார் எப்போது கமல் குடும்ப உறுப்பினர் ஆனார் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago