2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

குஷியில் நயன்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தாராவிடம் சென்று, நீங்கள் எத்தனைத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால், அவரால், உடனே பதிலளிக்க முடியாதந்தளவுக்கு, தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அஜித்துடன் 'விஸ்வாசம்' திரைப்படத்தில் நடித்த நயன், தற்போது 'ஐரா', 'கொலையுதிர்க்காலாம்', 'சயிரா நரசிம்மரெட்டி', 'மிஸ்டர் லோக்கல்', 'தளபதி 63' மற்றும் 'லவ் ஆக்ஷன் ட்ராமா' என, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில், வரிசையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவான 'லவ் ஆக்ஷன் ட்ராமா' என்ற மலையாளத் திரைப்படம், எதிர்வரும் செப்டெம்பர் 5இல் ரிலீஸ் ஆகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே, 'ஐரா' மற்றும் 'கொலையுதிர்க் காலம்' ஆகிய இரு தமிழ் திரைப்படங்களும் ரிலீசாகிவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--