2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

குஷ்பு மகளா இது?: வியக்கும் நெட்டிசன்ஸ்

Editorial   / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஷ்பு தன் இளைய மகள் அனந்திதாவின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதை பார்த்த ரசிகர்களால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மேலும் அனந்திதாவின் எடை குறைப்புக்கான ரகசியத்தை கேட்டுள்ளனர்.

குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே அப்பா சுந்தர் சி. போன்று நல்ல உயரம். 

இளைய மகள் அனந்திதா உயரத்திற்கு ஏற்ற எடையாக இருந்தார். அவர் பள்ளி செல்லும் சிறுமி என்று கூட பாராமல் சமூக வலைதளவாசிகள் எடையை வைத்து கிண்டல் செய்தனர். 

இந்நிலையில் அனந்திதா தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார்.

இந்நிலையில் தன் செல்ல மகளின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு என் பொம்மை குட்டி என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.

அந்த புகைப்படங்களில் அனந்திதா ஸ்லிம்மாகவும், மிகவும் அழகாகவும் இருக்கிறார். அனந்திதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “அனி குட்டி ஒரு இன்ஸ்பிரேஷன் தான். அவர் விரும்புவது எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .