Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஜனவரி 05 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.
திருமண திகதியை ரகசியமாக வைத்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.
நயன்தாராவுக்கு இப்போது 36 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இன்றுவரை தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
ஏற்கெனவே 2 முறை காதலில் சிக்கி முறிவு ஏற்பட்ட பிறகும் மார்க்கெட் சரியவில்லை.
2015-ல் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது அடுத்த மாதம் திருமணத்துக்கு தயாராவதாக புதிய தகவல் பரவி வருகிறது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago