2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பெண் மருத்துவருடன் பிரபுதேவா ரகசியத் திருமணம்

J.A. George   / 2020 நவம்பர் 19 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் பிரபுதேவா சில மாதங்களுக்கு முன்ப ரகசியத் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில்  பணிபுரிந்து வருபவர் பிரபுதேவா. 

இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் என தனியே  ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடனம் அமைத்த 'ரவுடி பேபி' பாடல் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

தற்போது இந்தியில்  சல்மான்கான் நடித்து வரும் 'ராதே' படத்தினை  பிரபுதேவா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ரகசியத் திருமணம் செய்துள்ளார் பிரபுதேவா. அத்தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரபுதேவாவுக்கு கடும் முதுகு வலி இருக்கும்போது, அவருக்கு பிசியோதெரபி பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. 

பின்பு, இரு  வீட்டினர் சம்மதத்துடன் சென்னையிலுள்ள பிரபுதேவா இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. பெண்ணின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

இந்தத் திருமணத்தில் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .