Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பிக்பாஸ் 3 சீசனில் இருந்து வெளியே வந்த நடிகை ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
'தல 60' திரைப்படத்தில் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க உள்ளதுடன், இந்த படத்தில் அஜித்துடன் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் 3 சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ரேஷ்மா கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். முதல் முறையாக எவிக்சன் பட்டியலில் இணைந்த ரேஷ்மா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் அஜீத் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள 'தல 60' திரைப்படத்தில் ரேஷ்மா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஷ்ணு விஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா நடித்திருந்தார்.

1 hours ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025