2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கவின்.! லொஸ்லியாவின் ரியாக்ஷன பாருங்க.!

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 

முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் ரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். 

எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர் . 

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். 

அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக சாக்க்ஷி மற்றும் கஸ்தூரி கூட பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 

தற்போது கவின் மற்றும் தர்ஷன் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்றவுடன் வனிதா, ஷெரினிடம் தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம் என்று கூறி ஷெரீனை அழ வைத்துள்ளார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .