2020 மே 29, வெள்ளிக்கிழமை

தற்கொலைதாரியின் சகோதரர்களுக்குத் தடுப்பு

Editorial   / 2019 மே 10 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத் என்பவரின் சகோதரர்கள் மூவரையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அனுமதியளித்தார்.   

தற்கொலைத்தாரியின் சகோதரர்கள் இருவர் மற்றும் சகோதரியொருவரே  இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அந்த மூவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பிரதான நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அதனடிப்படையில் மட்டக்குளியைச் சேர்ந்த அலாவுதீன் அஹமட் முஸ்டீன், அலாவுதீன் அஹமட் முஸ்தபா மற்றும் பாத்திமா சுமேயா அலாவுதீன் ஆகியோரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீதிமன்றத்தின் கண்காணிப்புக்காக, எதிர்வரும் 23 ஆம் திகதி, அந்த மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X