2020 மே 29, வெள்ளிக்கிழமை

நாமல் குமார கைது

Editorial   / 2019 மே 14 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளராகத் தெரிவிக்கப்படும் நாமல் குமார  இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரகாபொல பொலிஸ் நிலையத்தில்  முறைபாடொன்றை செய்ய வருகைத் தந்த போதே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்ற அமைதியின்மைத் தொடர்பில், விசாரணை செய்வதற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவரின் மேற்பார்வையின் கீழான விசேட பொலிஸ் குழுவால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஹெட்டிபொல நகரில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, நாமல் குமாரவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றக்  காட்சிகள் ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X