2020 ஜூலை 11, சனிக்கிழமை

“ புளுமென்டல் சங்க“ இந்தியாவில் கைது

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேடப்பட்டு வந்த பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  மற்றுமொரு குற்றவாளியான “புளுமென்டல் சங்க“ உள்ளிட்ட மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கேரளா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய,ராமநாதபுரத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போ​தே சங்க கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், வீசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே சங்க இலங்கையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியென தெரியவந்துள்ளது.

அத்துடன் குமார் என்ற பெயரில் இந்தியா அடையாள அட்டை சங்கவிடம் காணப்பட்டுள்ளதுடன், இவருடன் இலங்கையைச் சேர்ந்த ​எஸ். மொஹமட் என்ற நபரும்  இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .