Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத அதிபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பி.எம்.மிஹ்ஹார் தெரிவித்தார்.
பாடசாலைகள் திறப்பது தொடர்பான கலந்துரையாடல், பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில், அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.
இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் பட்சத்தில், ஒவ்வொரு மாணவனின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
மாணவர்களும், ஆசிரியர்களும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என்பவற்றை பேண வேண்டுமெனவும் அவர் கூறினார்.
பாடசாலை உணவகங்கள் மூடப்பட்டிருக்க வேண்டுமெனவும் மாணவர்களும் ஆசிரியர்களும் வீடுகளிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவு, குடிநீரைக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திய அவர், உணவு, நீர் பகிர்வது தவிர்த்தல் வேண்டுமென்றார்.
அடிக்கடி கை கழுவுவதோடு, மலசலகூடங்களைத் துப்புரவாக வைத்திருத்தல் வேண்டுமென்றும் தெரிவித்த அவர், பாடசாலைகளில் சுகாதாரப் பகுதியினர் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago