Editorial / 2020 மே 10 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பட்சத்தில், அத்தியவசியத் தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து வெளியேறுமாறு, அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எம்.ஏ. அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
இப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பொலிஸார், சுகாதாரத் துறையினருக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினால் தான் இக் கொடிய நோயிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற வேளையில் பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் தமக்குத் தேவையான அத்தியவசியப் பொருள்களை கொள்வனவு செய்து, உடனடியாக வீடு திரும்ப வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார்.
சமூக இடைவெளியைப் பேணுவதற்குரிய ஏற்பாடுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மாவட்டத்துக்குள் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து செய்யும் பொதுமக்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு, முகக்கவசம் அணியாதவர்கள், போக்குவரத்து செய்ய முடியாது எனவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, அத்தியவசிய சேவைகளை வழங்குவதற்கே அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் முடிந்து விட்டதாக, மக்கள் கருத வேண்டாமெனவும் ஆபத்து இன்னும் தொடர்ந்து வருவதாகவும் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் எச்சரித்துள்ளார்.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago