Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் 10,188 குடும்பங்களைச் சேர்ந்த 36,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ், இன்று (16) தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலேயே வரட்சி காரணமாக கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 9,928 பேரும், மகாஓயா பிரிவில் 5,777 பேரும், திருக்கோவில் பிரிவில் 1,110 பேரும், அம்பாறை பிரிவில் 356 பேரும், நாவிதன்வெளி பிரிவில் 8,329 பேரும், ஆலையடிவேம்பு பிரிவில் 3,644 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 204 பேரும், தமன பிரிவில் 2,276 பேரும், லகுகல பிரிவில் 1,467 பேரும், அட்டாளைச்சேனை பிரிவில் 3,186 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியால் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவை தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் தொகைக்கேற்ப பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கமைய, நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் டீ.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்மந்தப்பட்ட பிரதேச கால்நடை வைத்தியதிகாரிகள் தகவல்களை வழங்கும் பட்சத்தில், வரட்சியால் அல்லல்படும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago