Editorial / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 08 வர்த்தககர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவலகள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ், இன்று (17) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்காவின் ஆலோசனைக்கமைய, மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்ப்பட்டிருந்த வேளையில் நேற்று (16) பிரதான நகரங்களிலுள்ள அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவலகள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இச் சுற்றிவளைப்பின் போது, கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 08 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கூறினார்.
இவர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
10.04.2020ம் திகதிய அமுலுக்கு வரும் வகையில் 01 கிலோ கிராம் கீரி சம்பா 125 ரூபாயும், 01 கிலோ கிராம் வெள்ளை மற்றும் சிவப்பு கெகுளு 85 ரூபாயும், 01 கிலோ கிராம் சம்பா 90 ரூபாயும், நாட்டரிசி 01 கிலோ கிராம் 90 ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
6 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago