2025 மே 15, வியாழக்கிழமை

அலைபேசியூடாக மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்பு

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

ஸ்மாட் அலைபேசியூடாக, மின் பாவனையைக் கட்டுப்படுத்தும் நவீன புதிய தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்து, மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில், உயர்தர தொழில்நுட்பப் பிரிவில் கற்று வரும் அப்துல் லத்தீப் அஹமது யமீன் என்ற மாணவன் சாதனை புரிந்துள்ளார்.

வீடுகள், அரச, தனியார் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்குமிழ்கள் உள்ளிட்ட இதர மின் பாவனைப் பொருள்களை அலைபேசி ஊடாக துரத்தில் நின்றவாறே, இதன்மூலம் இலகுவாக இயக்க முடியும்.

தற்போது கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளதால், மின் ஆழிகளில் கை விரல்களின் தொடுகை இல்லாமல், தமது அலைபேசிகள் ஊடாக இலகுவாக மின் ஆழிகளின் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியுமென, இந்த மாணவன் தெரிவித்தார்.

விஞ்ஞான புத்தாக்க ஆணைக்குழு, தனது கண்டுபிடிப்புக்கான அங்கிகாரத்தை வழங்குவதனூடாக இந்தப் புதிய தொழில்நுட்ப முறையை மேலும் விஸ்தரிக்க முடியுமென்றும், மாணவன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .