Freelancer / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பொதியாக்கி தனது மனைவியின் வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பாதுகாப்பு உத்தியோஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்டிருந்த 7 கிலோகிராம் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026