2025 மே 15, வியாழக்கிழமை

உகந்தை உற்சவத்துக்கு அம்பாறை மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, சகா

உகந்தை ஸ்ரீமுருகன் கோவில் உற்சவத்துக்கு அம்பாறை மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 150 பேர் வழிபாட்டில் கலந்துகொள்ள முடியுமென, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரவித்தார்.

கிழக்கிலங்கை வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீ முருகன் கோவிலின் கொடியேற்றம், உற்சவங்களை நடத்தவது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றும் பொதுக் கூட்டம், இன்று(22) நடைபெற்றது.

லாகுகல பிரதேச செயலாளர் அனுறுத்த சந்தறுவான் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

உகந்தை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றம், ஜுலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட்  மாதம் 04ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன், இவ்வாண்டுக்கான உற்சவம் நிறைவு பெறவுள்ளன.

இந்நிலையில் இவ் உற்சவம் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றும் மேற்படிக் கூட்டத்தில், இம்முறை பாதயாத்திரியர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் உற்சவ காலங்களில் கோவிலுக்கு பக்தர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஒரு வேளை பூஜைக்கு 50 பேர் வீதம் மூன்று கால பூஜைகளிலும் நாள் ஒன்றுக்கு 150 பேர் மட்டுமே சுகாதார விதி முறைகளுக்கு ஏற்ப கலந்து கொள்ள முடியுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூஜை உபயகாரர்கள் 50 பேர்  கொண்ட பெயர் பட்டியலை தயாரித்து அந்தந்த பிரதேச சுகாதார வைத்தய அதிகாரியின் அனுமதியைப் பெற்று, கோவிலுக்கு வருகை தரவேண்டும் என்றும் இவ்வாறு நடைமுறையை பின்பற்றாது வருவோர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்ட பக்தர்கள் எந்தவித காரணங்களுக்காகவும் அனுமதி வழங்கப்பட மாவட்டாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .