Editorial / 2020 ஜூன் 29 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடல், ஒலுவில் பிரதேசத்தில் இன்று (29) நடைபெற்றது.
கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் எஸ்.எம்.எம்.இர்ஸாட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி சிரியாணி விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், பிரதேசமட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
நிகழ்வின் இறுதியில், பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பான வேலைத்திட்டம் அடங்கிய வழிகாட்டல் ஆவனங்கள், பிரதம அதிதியால் வழங்கிவைக்கப்பட்டன.
39 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago