2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உழவு இயந்திரங்களும் டிப்பர்களும் கைப்பற்று

Editorial   / 2020 மே 20 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழலைப் பயன்படுத்தி, சம்மாந்துறையில் வயல்வெளி சார்ந்த ஆற்றுப் படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மணலை ஏற்ற தயார் நிலையிலிருந்த 06 உழவு இயந்திரங்களும் 04 டிப்பர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல இடங்களில்  இனந்தெரியாத நபர்கள் ஆற்று மணலை அகழ்ந்து வருவதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்துக்கு, நேற்று (19) தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொறுப்பதிகாரி தலைமையிலான துர்நடத்தை தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர்,  சட்டவிரோத மணல் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட சந்தேகத்தில் மேற்படி உழவு இயந்திரங்களையும் டிப்பர்களையும், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த வாகனங்களில் பதியப்பட்டுள்ள சாரதிகளின் விவரங்களுக்கமைய, விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .