2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர் றஹ்மத்துல்லா சமுர்த்தி முகாமையாளராக நியமனம்

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சமுர்த்தி முகாமையாராக நியமனம் பெற்ற ரீ.கே.றஹ்மத்துல்லா, இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பட்டப் படிப்பை நிறைவு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, சமுர்த்தி முகாமையாளர்களாக நியமனம் செய்யும் திட்டத்தின் கீழ், இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.தஸ்லீம் தலைமையில் நேற்று (21)  நடைபெற்ற கடமை பொறுப்பேற்றல் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நசீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், உதவி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .