2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஒன்று கூடல்

Niroshini   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு அக்கரைப்பற்று ரீ.எப்.சி.ஹொட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று  பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட்லெவ்வை, கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பௌஸ், அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.இக்பால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசிம் தலைமையிலான 09 பேர் கொண்ட  விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .